பான்கி மூனின் றுவாண்டா - அகர முதல்வன்

புதிய வாசிப்பனுபவம்:

இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கும் அகரமுதல்வனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு பான்கி மூனின் றுவாண்டா. மொத்தம் பதினோரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கதைகளின் பிரதான மையம் இலங்கையில் நடந்த தமிழ்-சிங்களருக்கிடையேயான இனப்போரும் அதன் பின் விளைவுகளும்தான். ஈழத்துப் படைப்பாளிகளுக்கேயுரிய சொல் முறைகளும் சம்பவங்களும் நிறைந்து கிடைக்கின்றன. கவிஞரான அகர முதல்வன் தன் கதைகளின் வர்ணனைகளை கவித்துவத்துடன் எழுதிப்போகிறார். ஈழப் பயன்பாட்டு மொழியுடன் கவித்துவம் சேரும்போது ஒரு புதிய வாசிப்பனுவம் கிடைக்கிறது. பெரும்பாலான ஈழ எழுத்துக்காரர்களை துரத்தும் ஈழவிடுதலை என்னும் பெருங்கனவு அகரமுதல்வனையும் துரத்திக்கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சியமே இந்தத் தொகுப்பு. தொகுப்பின் முக்கியமான பல உள்ளடுக்குகளைக் கொண்ட கதை என்று கரை சேராத மகள் என்னும் கதையைச் சொல்லலாம். இன்னும் பல கதைகள் அடுத்தடுத்த வாசிப்பில் நமக்கு மாறுபட்ட வாசிப்பனுவங்களை  தரும் என்று நம்பலாம்.

பான்கி மூனின் றுவாண்டா - அகர முதல்வன்

கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் இல்லம், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை,

சென்னை -14