யுகங்களின் புளிப்பு நாவுகள்

உயிர்ப்பான சொற்களின் மூலமாக உணர்வுகளையும் சமூக சிந்தனைகளையும் கவிதைகளாக வடித்திருக்கிறார் மு. ஆனந்தன். தான் ஏர் பூட்டி கை சிவந்த அதே வயதில் தன் மகன் கல்லூரிக்குப் போக பைக் கேட்கிறான் என்கிற காட்சியை கவிதையாக வடிக்கும் போது இரண்டு வெவ்வேறு காலங்கள் ஒரே புள்ளியில் இணைந்து ஒரு எழுச்சியான உணர்வை உண்டுபண்ணுகின்றன. வாழ்வியலின் தருணங்களை, உறவுகளின் உரசல்களை, வறுமையின் சித்திரங்களை கவித்துவத்துடன் கூடிய வரிகளாக மாற்றியிருப்பதில் மு.ஆனந்தன் நிறைவை எட்டியிருக்கிறார்.

உதாரணம்:

“கருத்து நெடிந்த பனைமரம்
கருப்பட்டி வாயில் 
கூவிச்செல்கிறது
நுங்கு வாங்கலையோ... நுங்கு..”

யுகங்களின் புளிப்பு நாவுகள், மு. ஆனந்தன், வெளியீடு: அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408

https://zhakart.com/products/yagangalin-pulippu-naavalgal?variant=154083885080