குவர்னிகா 41வது இலக்கியச் சந்திப்பு மலர்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு மலர் வெளிவந்திருக்கிறது. 808 பக்கங்களில் வலுவான

சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண் விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப் பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு என்று இது தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறது. இதிலிருக்கும் அ.முத்துலிங்கத்தின் அழகிய லைலா என்ற சிறுகதை படிக்கப்படிக்க மனதை விட்டு அகல மறுக்கும் பிரதியாக இருக்கிறது. ஷோபா சக்தி, கற்சுறா, ரிஷான் ஷெரிப், கெரெ.பாலமுருகன், மெலிஞ்சி முத்தன், ம.நவீன் உள்ளிட்ட பலரின் சிறுகதைகள், அமெரிக்காவில் பிறந்த ஈழத்தமிழ் பெண் கலைஞர் யாழினி, ஒட்டமாவடி அறபாத், டாக்டர் மா.சிவா, லிவிங்ஸ்மைல் வித்யா, ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், திருக்கோவில் கவியுகன் ஆகியோரின் விரிவான நேர்முகங்கள் உள்ளன. ஸர்மிளா செய்யித், சோலைக்கிளி உள்ளிட்டவர்களின் கவிதைகள் மற்றும் ஏராளமான கட்டுரைகளுடன் செறிவான தொகுப்பு.

வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி,

சென்னை- 600005