அகநாழிகை இதழ் மார்ச் 2014

இனி தொடர்ந்து காலாண்டிதழாக வெளிவரும் என்ற அறிவிப்புடன் வெளிவந்திருக்கிறது அகநாழிகை இலக்கிய இதழ். பொன்.வாசுதேவனை ஆசிரியராகக் கொண்டிருக்கும் இந்த மார்ச் மாத இதழ் பல காத்திரமான படைப்புகள், நேர்காணல்களைக் கொண்டிருக்கிறது. தலித்திய ஆய்வாளரான ஸ்டாலின் ராஜாங்கத்துடனான நீண்ட பேட்டி, தலித் அரசியல் இயக்கங்கள் பற்றிய பல்வேறு தகவல்களைத் தருகிறது. சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டி குருஸுடனான இன்னொரு நேர்காணலும் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. தந்தை பெரியாரின் பெண்ணியக் கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் தி.பரமேசுவரியின் ஈவேரா பெரியாரின் பெண்ணியம் பாடபேதமும் இயந்திரத்தனமும் என்ற கட்டுரை தீவிரமான எதிர்வினைகளை உருவாக்கக் கூடியது. ராஜசுந்தரராஜன், ராஜ்சிவா, குட்டி ரேவதி, இசை, எச்.பீர் முகமது, ஜீவ கரிகாலன், சித்தார்த் வெங்கடேசன், பொன்.வாசுதேவன் ஆகியோரின் படைப்புகளும் உள்ளன.

அகநாழிகை , எண்,33,மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603306