Book Reviews

 • சேப்பியன்ஸ் -மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

  கடவுளான ஒரு விலங்கினம்! சேப்பியன்ஸ் என்கிற மனித குலத்தின் தோற்றம், வளர்ச்சி, தற்போதைய நிலை ஆகியவற்றைப் பற்றி மனித குலம் இதுவரை கண்டறிந்து வைத்திருக்கும் விஷயங்களை எல்லாம் ஒரே புத்தகத்தில் வாசிக்க வேண்டுமானால் யுவால் நோவா ஹராரியின் இந்த புத்தகத்தைத் தவறவிடக்கூடாது. சேப்பியன்ஸ் ஆன இருக்கும் நாம் மட... More

 • புத்திக் கொள்முதல்

  அன்றாட வாழ்க்கை:  சக மனிதர்களின் வாழ்வில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை அழகாக தமக்கே உரிய பார்வையில் சிறுகதைகளாக ஆக்கியிருக்கிறார் ஜனநேசன். கொள்ளை என்ற சிறுகதையில் வீட்டில் நகைகளைக் கொள்ளை கொடுத்துவிட்டு ஒரு குடும்பம் படும் பாட்டைச் சொல்கிறார். மீட்கப்படுவது நகை அல்ல. அது உருக்கப்பட்ட தங்க உருண்ட... More

 • தென் பெண்ணைக் கதைகள்

  போர்க்குரல்கள் என் கதைகள் சில நேரம் கூக்குரல் எழுப்பும் சில நேரம் போர்க்குரல் எழுப்பும் என்கிறார் அன்பாதவன். அவருடைய சிறுகதைத் தொகுப்பான தென் பெண்ணைக் கதைகளில் இப்படிப்பட்ட கதைகளே நிறைய இருக்கின்றன. இத்தொகுப்பின் கடைசிச் சிறுகதையான சம்பவாமி யுகே யுகே என்ற கதை தேர்க்காலில் தன் மகனை இட்டுக்கொன்று ... More

 • பாண்டித்துரை

  போரும் மனிதர்களும் நல்ல திரைப்படத்துக்கானது  போல எழுதப்பட்டிருக்கிறது இந்த கதை. வெள்ளைக்காரர்கள் காலத்தில் ஆரம்பிக்கும் இக்கதை சமகாலத்தில் லண்டனில் முடிவடைகிறது.  தமிழகத்தில் பிறக்கும் பாண்டித்துரை, பின்னர் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து முதலாம் உலகப்போரில் கலந்துகொண்டு சாகசங்கள் செய்து லண்டனி... More

 • இங்கிவனை யாம் பெறவே! நட்பில் உயிர்த்தெழும் மடல்கள்

  கடிதங்கள் சொல்லும் காலம்! பேராசிரியர் இரா.இளவரசு பெற்ற மடல்களும் விடுத்த மடல்களும் என்கிற இந்த தொகுப்பு நூலில் அவருக்கு வந்த 125 கடிதங்களும் எழுதிய 191 கடிதங்களும் உள்ளன.  இளவரசுக்கு  கல்லூரி நண்பர் முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன். அவர் தம் இயற்பெயரான மு.சாத்தையா என்ற பெயரில் எழுதிய கடிதங்கள்... More

 • சகலகலா வல்லபன்

  வழிகாட்டும் நினைவுகள் மீன் கொடித்தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் - என்று தொடங்கும் பாட்டைக் கேட்டதும் ஞாபகத்துக்கு வரவேண்டிய பெயர் எம்.ஜி.வல்லபன். திரைப்பத்திரிகையாளரான இவர் பிலிமாலாயா, ஹெல்த் போன்ற பிரபலமான பத்திரிகைகளை நடத்தியவர். பல படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். இயக்குநரும்கூட.இவர்மூலம... More

 • வைதீஸ்வரன் கதைகள்:

  நினைவுகளின் சாளரம்: கவிஞராக அறிந்திருக்கும் எஸ்.வைதீஸ்வரனை சிறுகதையாசிரியராகவும் அறிய வைக்கும் தொகுப்பாக இருக்கிறது கவிதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அவரது சிறுகதை நூல். கிட்டத்தட்ட எல்லா கதைகளுக்குமான ஆதாரங்களை வாழ்வின் அனுபவங்களில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார் வைதீஸ்வரன்.  ஒரு ஜன்னல் வழி... More

 • இன்றும் இனிக்கிறது நேற்று:

  தமிழ்ப்பயணம்:   பிழையின்றி தமிழ் பேசுவோம் உள்ளிட்ட முப்பத்து ஆறு நூல்களைப் படைத்தவரான கவிக்கோ ஞானச்செல்வன் 1957-ல் தொடங்கிய இலக்கியப்பயணத்தில் 2011 வரையிலான நிகழ்வுகளில் சிலவற்றை இந்நூலில் எழுதி இருக்கிறார்.  இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நிகழ்வில் தொடங்... More